Advertisment

சேலம், திருப்பூர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்யக்கூடும். சேலம், திருப்பூர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Latest News Updates

Tamil Nadu Latest News Updates

தர்மபுரி, சேலம், நாமக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கரூர், திருப்பூர், ஈரோடு, தேனி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம், நேற்று (16ம் தேதி) இரவு 9.30 மணியளவில் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சேலம், தர்மபுரி கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய சூழல் நிலவும் என்றும், காற்றின் வேகம் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் இருக்கும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கும்.

மழைப்பதிவு

மே 16ம் தேதி காலை 8.30 மணிநிலவரப்படிபதிவான மழையளவு ( செ.மீ.)

மரந்தஹள்ளி - 5 செ.மீ

காங்கேயம் - 4 செ.மீ

பெரியார், தேன்கனிகோட்டை வாடிப்பட்டி - 3 செ.மீ

ஹோகனேக்கல், கடவூர், கிருஷ்ணகிரி, பவானிசாகர், கொடைக்கானல் - 2 செ.மீ

பாலிக்கோடு, கொடுமுடி, ஓசூர், திருப்பூர் - 1 செ.மீ என்றளவில் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.

Chennai Tamilnadu Weather
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment