/tamil-ie/media/media_files/uploads/2022/10/tamil-indian-express-2022-10-21T154623.979.jpg)
KS Radhakrishnan - DMK Tamil News: திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த நிர்வாகிகளில் ஒருவராக செயல்பட்டு வந்தவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இவர் திமுகவில் செய்தி தொடர்பாளராக பணியாற்றில் வந்தார். இந்நிலையில், கே.எஸ் ராதாகிருஷ்ணன் திமுக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/tamil-indian-express-2022-10-21T155502.632.jpg)
கே.எஸ் ராதாகிருஷ்ணன் காமராசர், கலைஞர் கருணாநிதி, போன்ற அரசியல் தலைவர்களுடன் நல்ல நட்பு கொண்டவர். அரசியலில் மட்டுமல்லாது சிறந்த எழுத்தாளராகவும் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே, தமிழக அரசியல் கட்சிகளில் செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்பட்டவர். பல்வேறு போராட்டங்களில் இவர் கலந்துகொண்டு சிறைக்கு சென்றவர். 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத்தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டார்.
கே.எஸ் ராதாகிருஷ்ணன் நீக்கம் ஏன்? வெளியான புதிய தகவல்கள்
இந்நிலையில், திமுக செய்தி தொடர்பாளராக இருந்த கே.எஸ் ராதாகிருஷ்ணன் ஏன் திடீரென கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. அதில் சசி தரூர், மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் வேட்பாளர்களாக களமாடி இருந்த நிலையில், 7,897 வாக்குகள் பெற்ற மல்லிகார்ஜுனா கார்கே அபார வெற்றி பெற்றார். அவருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/tamil-indian-express-2022-10-21T131300.530-1.jpg)
இதனிடையே, திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.அவரது அந்தப் பதிவில் “மன்மோகன் சிங் 2.0ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாழ்த்துகள்” என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் மன்மோகன் சிங் புகைப்படத்தில் மல்லிக்கார்ஜுன கார்கே தலையை மார்ப் செய்தது போல் புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/tamil-indian-express-2022-10-21T130858.309-1.jpg)
இது காங்கிரஸ் கட்சியினரிடையே மட்டுமின்றி திமுகவினர் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் திமுக தலைவர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து தான் அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளனர்.
திமுகவினருக்கு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்
கடந்த அக்டோபர் 4ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க ஸ்டாலின் திமுகவின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் முறையற்ற நடத்தையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்று கூறி எச்சரித்தார். மேலும், உட்கட்சித் தேர்தல்கள் பின்னணியில் பேசுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கவனக்குறைவாகச் செயல்பட வேண்டாம் என்று முதல்வர் வலியுறுத்தினார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/MK-Stalin-4-5.jpeg)
“உங்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் ஒருவர் கண்ணியத்தைக் காக்க வேண்டும். உதவிக்காக உங்களை அணுகும் நபர்களிடம் வார்த்தைகள், உடல் மொழி மற்றும் அணுகுமுறை ஆகியவற்றில் கவனமாக இருங்கள். குறிப்பாக மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள், இரட்டிப்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசாங்கத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் இதுபோன்ற செயல்களில் நீங்கள் ஈடுபட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்." என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.