தபால் படிவங்கள் இனி தமிழிலும் கிடைக்கும்; அஞ்சல் துறை உறுதி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுதிய கடிதத்திற்கு பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்க்பட்டுள்ளது என்று அஞ்சல்துறை பொது மேலாளார் கூறினார்.

Postal forms to be available in Tamil

வாடிக்கையாளார்கள் தொடர்பான அஞ்சல் படிவங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்படும் என்று அஞ்சல்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தின் அஞ்சல் துறை பொது மேலாளர் பி. செல்வக்குமார, மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு இது தொடர்பாக உறுதி அளித்துள்ளார்.

அஞ்சல்த்துறை பொதுமேலாளருக்கு வெங்கடேசன் எழுதிய கடிதம் ஒன்றில் அஞ்சல் படிவங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மட்டுமே தெரிந்த பொதுமக்கள் மணி ஆர்டர் மற்றும் சிறு சேமிப்பு கணக்கு போன்ற சேவைகளை பயன்படுத்தும் போது, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் படிவங்கள் இருப்பது அவர்களுக்கு சிரமத்தை தருகிறது என்று கூறியுள்ளார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுதிய கடிதத்திற்கு பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்க்பட்டுள்ளது என்று அஞ்சல்துறை பொது மேலாளார் கூறினார். மேலும் வாடிக்கையாளார்கள் தொடர்பான அனைத்து படிவங்களும், சேமிப்பு திட்டங்கள், மணி ஆர்டர் தொடர்பான படிவங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் அச்சிட்டு அனைத்து தபால் நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Postal forms to be available in tamil

Next Story
ரகசிய பணம் சப்ளை…முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு அதிகாரி கைது
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X