திருச்சி மாவட்டம், அம்பிகாபுரம், லால்குடி எல். அபிஷேகபுரம் துணை மின் நிலையங்களில் நாளை (ஜன 4) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரெயில்நகர், நேருஜி நகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர், சக்தி நகர், ராஜப்பா நகர், எம்.ஜி.ஆர். நகர், பாலாஜி நகர், மேலகல்கண்டார் கோட்டை, கீழகல்கண்டார் கோட்டை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், வெங்கடேஸ்வரா நகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகர், அரியமங்கலம் இண்டஸ்ட்ரியல் சிட்கோ காலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம், விண்நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் தடை ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், லால்குடி, ஏ.கே. நகர், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகர், பச்சன்னபுரம், உமர்நகர், பாரதிநகர், வ.உ.சி.நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர், ஆங்கரை, மலையப்பபுரம், கூகூர், இடையாற்றுமங்கலம், பச்சாம் பேட்டை, மும்முடிச் சோழமங்கலம், பெரியவர்சீலி, மயிலரங்கம், மேலவாளை, கிருஷ்ணாபுரம், சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.
செய்தி - க.சண்முகவடிவேல்