மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையின் போது மின் தடை ஏற்பட்டதை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
ஒருநாள் பயணமாக நேற்றிரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தடைந்தார். விமானம் மூலம் இரவு 9 மணிக்கு சென்னைக்கு வந்த அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா உடனான பிரபலங்கள் சந்திப்பு நடைபெற்றது. கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில்துறை சார்ந்த 25 முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்துகொண்டர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஆர்.கே.செல்வமணி, ஐசரி கணேஷ் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு நள்ளிரவு 1.30 மணிக்கு நிறைவு பெற்றது. இந்நிலையில் அமித்ஷா, சென்னை ஐடிசி கிராண்ட் சோலா ஹோட்டலுக்கு வந்தபோது மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் இதை கண்டித்து பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
”மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையின் போது மின்தடை ஏற்பட்டது குறித்து தமிழக அரசை குற்றம் சுமத்த முடியாது. அடுத்த முறை இதனை நடக்காமல் பார்த்துகொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“