/tamil-ie/media/media_files/uploads/2022/04/electricity-consumption-1200.jpg)
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகப்பட்ச மின்சார பயன்பாடு பதிவாகியுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், வியாக்கிழமை அன்று சுமார் 387.047 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் முந்தைய அதிகபட்ச மின் பயன்பாடு கடந்த மார்ச் மாதம் 29 அன்று 378.328 மில்லியன் யூனிட் ஆகும் என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவர், மாநிலத்தின் அதிகபட்ச மின்சார தேவையாக மார்ச் 29 அன்று பதிவான 17,196 மெகாவாட் கருதப்பட்டு வந்த நிலையில், வியாக்கிழமை அன்று மின்சார தேவை 17,370 மெகாவாட்டை எட்டியுள்ளது. அதேசமயம், மின்சாரம் தடையின்றி நுகர்வோரின் மின்சார தேவை பூர்த்தி செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
நேற்று 28/04/22 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 387.047 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெகாவாட் அளவில் 17,370 MW.இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது.
இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு மார்ச் 2022 இறுதியில், 378.328மி.யூ / 17,196 MW#TNEBunderCMStalin— V.Senthilbalaji (@V_Senthilbalaji) April 29, 2022
டாங்கெட்கோவின் மூத்த அதிகாரி ஒருவர் நாளிதழுக்கு அளித்த தகவலின்படி, கோடை காலம் என்பதால் வரும் நாட்களில் மின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
நிச்சயம் 17,500 மெகாவாட் அல்லது அதற்கு மேல் செல்லக்கூடும். அதே நேரம் மின்சார தேவை அதிகரித்தாலும், அதனை நிச்சயம் பூர்த்தி செய்து தடையின்றி மின்சாரம் வழங்குவோம் என்றார்.
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, பல மாநிலங்களில் மின்சார தேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.