திருச்சி தில்லை நகர் பகுதியில் நாளை ஒரு நாள் காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தென்னூர் மின்வாரிய செயற் பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :
புதை சாக்கடை திட்டப் பணிகளுக்காக திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளில் மின் தடை அமல்படுத்தப்படவுள்ளது. திருச்சி மாநகராட்சி நிா்வாகத்தால், தில்லைநகா் பகுதியில் புதன்கிழமை (மாா்ச் 12) புதை சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே, தில்லைநகா் முதலாவது குறுக்குத் தெரு, மேற்கு இரண்டாவது குறுக்குத் தெரு, மூன்றாவது குறுக்குத் தெரு, சாஸ்திரி சாலை, விஸ்தரிப்பு, வடகிழக்கு விஸ்தரிப்பு ஒன்றாவது குறுக்கு தெரு முதல் 5-ஆவது குறுக்குத் தெரு வரை, தேவா் காலனி, சாலை ரோடு கிழக்கு, மலைக்கோட்டை காலனி, கரூா் புறவழிச் சாலை, அண்ணாமலை நகா் ஒரு பகுதி உள்ளிட்ட இடங்களில் நாளை 12- ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தென்னூா் மின்வாரிய செயற்பொறியாளா் கா. முத்துராமன் தெரிவித்துள்ளாா்.
க.சண்முகவடிவேல்