Advertisment

Chennai Power Shutdown on 2nd November: எந்தெந்த ஏரியாக்களில் இன்று மின்தடை?

Chennai Power Shutdown - 2nd November, Wednesday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown on 2nd November: எந்தெந்த ஏரியாக்களில் இன்று மின்தடை?

Chennai Power Shutdown - 2nd November

Chennai Power Shutdown on 2nd November: சென்னையில் 02.11.2022 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணா நகர், போரூர், அடையார், பெரம்பூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

publive-image

அண்ணா நகர் பகுதி : மதுரவாயல் கணபதி நகர் 1 முதல் 7வது தெரு, மெட்ரோ நகர், திருமூர்த்தி நகர், காந்தி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

போரூர் பகுதி : திருமுடிவாக்கம் 5, 6 மற்றும் 14வது மெயின்ரோடு திருமுடிவாக்கம் சிட்கோ மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அடையார் பகுதி : வேளச்சேரி பை பாஸ் ரோடு (ஏக்சலண்ட் மருத்துவமனை முதல் ஜி.ஆர்.டி வரை), மேட்டுத்தெரு, நாட்டூர் தெரு, ராஜலட்சுமி பகுதி முழுவதும் ராஜ்பவன் ராசாவிட் ஹோட்டல், சங்கீதா ஹோட்டல், திரு.வி.க. தெரு, அன்பில் தர்மலிங்கம் தெரு, நேரு நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பெரம்பூர் பகுதி: காந்தி நகர் முத்தமிழ் நகர் 6 மற்றும் 8வது பிளாக், வில்லிவாக்கம் பகுதி, எம்.டி.எச்.ரோடு, மூர்த்தி நகர், துரைசாமி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அம்பத்தூர் பகுதி: ஜெ.ஜெ.நகர் அம்பேத்கர் நகர், கங்கையம்மன் நகர், வினோத் விருட்சா அப்பார்ட்மென்ட், கோல்டன் ஹோம்ஸ் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment