Advertisment

'கடவுளுக்கே உணவு படைக்கும் விவசாயிகளை வஞ்சிக்கிறீர்கள் நியாயமா?': பஞ்சாப்பில் பி.ஆர்.பாண்டியன் பேச்சு

'கடவுளை வணங்கி ஆட்சி நடத்துகிறீர்கள், ஆனால் அந்த கடவுளுக்கே உணவு படைக்கும் விவசாயிகளை வஞ்சிக்கிறீர்கள் நியாயமா?' என்று பஞ்சாப்பில் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
PR Pandian Farmers association leader speech at Punjab Tamil News

'கடவுளை வணங்கி ஆட்சி நடத்துகிறீர்கள், ஆனால் அந்த கடவுளுக்கே உணவு படைக்கும் விவசாயிகளை வஞ்சிக்கிறீர்கள் நியாயமா?' என்று பஞ்சாப்பில் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

பஞ்சாப் கண்ணூரி பார்டரில் 40-வது நாளாக உண்ணாவிரதம் மேற்க்கொண்டுள்ள சம்யுக்த் கிசான் மோர்ச்சா தலைவர் ஜக்ஜித் சிங் டல்லேவால் ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு தீர்வு காண வலியுறுத்தி இன்று நடைபெற்ற மகா கிசான் பஞ்சாயத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் பேசியதாவது:-

Advertisment

கண்ணூரி பார்டரில் பல லட்சக்கணக்கில் கூடியிருக்கிற விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சார்பில் அன்பான  வணக்கங்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு நடைபெறுகிற போராட்டம் இந்திய விவசாயிகளுக்கான மறு சுதந்திர போராட்டம். மகாத்மா காந்தி ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் போராடினார்.  தற்போது மோடி அரசுக்கு எதிராக இந்திய விவசாயிகளுக்காக மகாத்மா காந்தியாக ஜக்ஜித்சிங் டல்லேவால் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். 

இந்திய விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு போராடுகிறார். இவரது கோரிக்கையை ஏற்க மறுக்கும் மோடி அரசுக்கு கண்டனம் தெரிவித்து பல லட்சக்கணக்கில் காஷ்மீர் முதல் கண்ணியாகுமரி வரை விவசாயிகள் இங்கு ஒன்று கூடி உள்ளோம்.
அரசியல் சாசனப்படி குறைந்தபட்ச  ஆதார விலை கேட்பது எங்கள் ஜனநாயக உரிமை. அதனை சட்டமாக்க வேண்டியது பிரதமர் மோடியின் கடமை. இதனை பிரதமர் மோடி மறுப்பதால் அவரை கண்டித்து 40-வது நாளாக டல்லேவால் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்க்கொண்டு உடல் நலிவுற்று வருகிறார். அவரை காப்பாற்ற பிரதமர் மோடியை வலியுறுத்தி நாம் போராடுகிறோம்.

கடவுளை வணங்கி ஆட்சி நடத்துகிறீர்கள். ஆனால் அந்த கடவுளுக்கே உணவு படைக்கும் விவசாயிகளை வஞ்சிக்கிறீர்கள் நியாயமா? அரசியல் சாசனப்படி குறைந்தபட்ச ஆதார விலை கேட்பது எங்கள் ஜனநாயக உரிமை. அதனை சட்டமாக்க வேண்டியது பிரதமர் மோடியின் கடமை. இதனை பிரதமர் மோடி மறுப்பதால் அவரை கண்டித்து 40வது நாளாக டல்லேவால் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்க்கொண்டு உடல் நலிவுற்று வருகிறார். அவரை காப்பாற்ற பிரதமர் மோடியை வலியுறுத்தி நாம் போராடுகிறோம்.

Advertisment
Advertisement

கடவுளை வணங்கி ஆட்சி நடத்துகிறீர்கள். ஆனால் அந்த கடவுளுக்கே உணவு படைக்கும் விவசாயிகளை வஞ்சிக்கிறீர்கள். உங்களை கடவுளே மன்னிக்க மாட்டார் என நான் எச்சரிக்கிறேன்.

வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சவுகான் அவர்களுக்கு சில கேள்வியை முன் வைக்கிறேன். 

1) பொதுவெளியில் உங்களை நேருக்கு நேர் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் விவசாயிகளுக்கு பாவம் செய்யாதீர்கள் என எச்சரிக்கை விடுத்தார். ஆனால் இதுவரையிலும் குடியரசுத் துணைத் தலைவரின் கேள்விக்கும் நீங்கள் பதில் அளிக்க மறுத்தது ஏன்?  

2) தற்போது சொல்கிறீர்கள் நீதிமன்ற உத்தரவை ஏற்க தயார், எனவே நீதிமன்ற உத்தரவுக்காக மத்திய அரசு காத்திருப்பதாக சொல்லுகிறீர்கள். இதன் உள்நோக்கம் என்ன? என்பதை மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.

3) மாவீரன் பகத்சிங் தன் உயிரை கொடுத்து பெற்று தந்த சுதந்திர இந்தியாவில் சுக்ரவன் சிங் உள்ளிட்ட விவசாயிகளை சுட்டுக் கொள்ளுவது நியாயமா? 

உங்களை பாரத மாதாவே மன்னிக்க மாட்டார் என நான் எச்சரிக்கிறேன், உச்சநீதிமன்ற நீதியரசர்களுக்கு இருக்கிற மனிதாபிமானம் மோடிக்கு இல்லையே என வருந்துகிறோம். நீதிமன்றம் வழிகாட்டுதல்களை பின்பற்றி பிரதமர் மோடி உடனடியாக குறைந்தபட்ச ஆதார விலையை கொண்டு வந்து டல்லேவால் உயிரை பதுகாக்க வேண்டும். விவசாயிகள் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். மறுப்பாறேயானால் விவசாயிகள்  மன்னிக்க மாட்டோம். 

பஞ்சாபில் நடைபெறும் போராட்டம் இந்தியாவில் வாழும் 100 கோடி விவசாயிகளுக்கான போராட்டமாகும். எனவே தான் இந்தியா முழுவதும் மோடிக்கு எதிராக ஒன்றுபட்டு வெற்றி பெறுவோம். தமிழக விவசாயிகள் துணை நிற்போம் என உறுதியளிக்கிறோம். 

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் அபிமன்யுகொ ஹார், சுக்கிரவன்சிங். லக்கிந்தர்சிங், கே எம் எம் தலைவர் சர்வன் பாந்தர், தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் குரு புருசாந்தக்குமார் உள்ளிட்ட ஹரியானா, பஞ்சாப், உபி, பீஹார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் சங்க தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

செய்தி: க.சண்முகவடிவேல். 

 

PR Pandian
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment