Advertisment

மத்திய அரசுடன் ஆலோசித்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யுங்கள்; தமிழக அரசுக்கு பி.ஆர் பாண்டியன் கோரிக்கை

வேளாண்மைக்கென தனி பட்ஜெட்டை தாக்கல் செய்வது வரவேற்கக் கூடியதாக இருந்தாலும், தொடர்ந்து காகித பட்ஜெட்டாக காட்சியளிப்பது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது; பி.ஆர். பாண்டியன்

author-image
WebDesk
New Update
PR Pandian Press

வேளாண்மைக்கென தனி பட்ஜெட்டை தாக்கல் செய்வது வரவேற்கக் கூடியதாக இருந்தாலும், தொடர்ந்து காகித பட்ஜெட்டாக காட்சியளிப்பது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது; பி.ஆர். பாண்டியன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மத்திய அரசின் வேளாண் சார்ந்த துறைகளை கலந்தாலோசிக்காமல் தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு பயன் அளிக்காது. பட்ஜெட்டிற்கு முன் அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் குழுவை டெல்லி அனுப்பி ஆலோசிக்க முதலமைச்சர் வழி காட்ட வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வரவேற்கிறோம், மேட்டூரிலிருந்து 2 டிஎம்சி தண்ணீரை கூடுதாலாக விடுவித்திட வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

இது குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

காவிரி டெல்டா மாவட்டங்களில் கருகும் பயிரை காப்பாற்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 2 டி.எம்.சி தண்ணீர் விடுவித்து இருப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் இன்னும் 2 டி.எம்.சி தண்ணீர் கூடுதலாக விடுவித்தால் தான் விளை நில பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையும், நீர் நிலைகளையும் நிரப்ப முடியும். கருகும் பயிரை காப்பாற்ற முடியும். இல்லையேல் திறக்கப்பட்ட தண்ணீரும் வீணாகிப் போய்விடும்.

எனவே, இன்னும் ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து தண்ணீரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு 3 வது ஆண்டாக வேளாண்மைக்கென தனி பட்ஜெட்டை தாக்கல் செய்வது வரவேற்கக் கூடியதாக இருந்தாலும், தொடர்ந்து காகித பட்ஜெட்டாக காட்சியளிப்பது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

நிதி ஒதுக்கீடு இன்றி பட்ஜெட் தாக்கல் செய்வதால் ஏற்கனவே விவசாயிகள் பெற்று வந்த சலுகைகள் பலவற்றை இழந்துள்ளனர். காகித பட்ஜெட்டாக வாசிப்பதால் எந்த பயனும் கிடையாது. அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், துறை சார்ந்த நடவடிக்கைகளில் வேளாண் துறை சார்ந்த மத்திய அரசு அமைச்சகங்களோடு கலந்து ஆலோசனை செய்ய வேண்டும்.

குறிப்பாக வேளாண்துறைக்கு என்று 20க்கும் மேற்பட்ட துறைகள் மூலம் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சரும், உயர் அதிகாரிகளும் சந்தித்து பேசி ஒதுக்கீடுகளை அறிந்து அதனடிப்படையில் பட்ஜெட்டை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்வதுதான் பயனளிக்கும்.

அதற்கான எந்த கலந்தாலோசனைகளையும் இதுவரையிலும் தான் பதவி ஏற்றது முதல் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மேற்கொள்ளாதது பட்ஜெட்டிற்கும், தமிழக அரசுக்கும், விவசாயிகளுக்கும் பேரிழப்பாகும். எனவே, முதலமைச்சர் வேளாண்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் ஒரு குழுவை டெல்லிக்கு அனுப்பி கலந்தாலோசனை செய்து பட்ஜெட் தயாரிப்புக்கு வழி காட்ட வேண்டும்.

மத்திய அரசு உரத்திற்கு சென்றாண்டு வழங்கிய மானியம் ரூ.2.50 லட்சம் கோடியில் இருந்து, இந்த ஆண்டு ரூ.1.65 லட்சம் கோடியாக குறைத்து விட்டது. மாற்றாக இயற்கை உரத்தை பயன்படுத்துவதற்கு பிரதமர் வேண்டுகோள் விடுகிறார். ஆனால், இயற்கை உரம் தயாரிப்புக்கான மானியங்களை இதுவரையிலும் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய முன்வரவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு இரசாயன உரம் பயன்பாட்டிற்கும் மானியம் குறைந்துள்ள நிலையில், தமிழ்நாடு விவசாயிகளுக்கு இயற்கை உர உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டுமானால் மானியங்களை கூடுதலாக வழங்கி இயற்கை உரங்களை பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவ படுத்திருப்பதை வரவேற்கிறோம், நன்றி கூறுகிறோம். அதே நேரத்தில் அவர் விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சிக்கு மட்டுமல்ல உழவர்களின் வளர்ச்சிக்கும் இணைந்து அவர் போராடினார். எனவே, அவருடைய கனவினை செயல்படுத்தி அவருக்கு நன்றி கடன் செலுத்த வேண்டுமானால் லாபகரமான விலை மற்றும் வேளாண்துறைக்கான அவரது பரிந்துரைகளை மத்திய அரசு உடன் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, மாநிலத் துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார், செய்தி தொடர்பாளர் மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக, நேற்று நாளை முதல் மேட்டூரில் இருந்து விவசாயத்திற்காக 2 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டது முழுவதும் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu PR Pandian
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment