/indian-express-tamil/media/media_files/2025/03/21/58bC7FQzvpUgQzd6AYaY.jpg)
பி.ஆர் . பாண்டியன் கைது
மத்திய அரசு பஞ்சாபில் சண்டிகரில் விவசாய சங்க தலைவர் தென் மாநில ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன் உள்ளிட்ட தேசிய ஒருங்கிணைப்பு SKM (NP) தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து நயவஞ்சகமாக ஒன்றிய அரசு விவசாய சங்க தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது என தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பஞ்சாப் சென்ற தமிழக விவசாய சங்க தலைவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளதால் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தலைவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு சார்பாக தமிழ்நாடு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு பொதுச் செயலாளர் வி.கே.வி. துரைசாமி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்;
மத்திய அரசு மோடி அரசு 2014இல் தேர்தல் வாக்குறுதியாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வருவோம்.
எம் எஸ் சாமிநாதன் பரிந்துரை குழுவின் அறிக்கையை அமல்படுத்துவோம், பேரிடர் காலங்களில் விவசாயி கடன்களை தள்ளுபடி செய்வோம் என வாக்குறுதி கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற 12 ஆண்டுகளாக எந்த ஒரு கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு மாறாக வேளாண் விரோத சட்டங்களை அமல்படுத்தி விவசாயிகளை வஞ்சித்தும், விவசாயிகளை அடக்கியும், அடிமைப்படுத்தியும் விவசாயிகளுடைய போராட்டங்களை சீர்குலைக்கவும் தொடர்ந்து மத்திய மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற சொல்லி அமைதி வழியில் டெல்லியை நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகளை தடுத்து நிறுத்தி கண்ணீ புகை கொண்டு வீசியும், குருவியை சுடுவது போல் சுட்டு வீழ்த்தியும், விவசாயிகளை விரட்டியது.
இதனை கண்டித்து எஸ்.கே.எம் அமைப்பின் தேசிய தலைவர் ஜகஜித் சிங் டல்லேவால் அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து தொடர்ந்து பஞ்சாப் சம்பு பாடர் மற்றும் கநூரி பார்டரில் தொடர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
SKM NP அமைப்பின் தேசிய தலைவர் கடுமையான உண்ணாவிரத போராட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த முடிவும் ஏற்படாத நிலையில் கடந்த 19 ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலத்தின் தலைநகர் சண்டிகரில் மத்திய அரசின் சார்பில் வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயில் வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பிரகலாத் ஜோஷி ஆகியோர் தலைமையில் தேசிய விவசாய சங்க தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
பேச்சு வார்த்தையில் எந்த உடன்பாடும் முடிவும் எடுக்காத நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை மே 4 நான்காம் தேதி என இரு தரப்பிலும் தீர்மானிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை முடிந்து போராட்ட களங்களுக்கு சென்ற விவசாய சங்க தலைவர்களை காவல்துறை வழியிலேயே மறித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
பேச்சுவார்த்தைக்குச் சென்ற பல்வேறு மாநில விவசாய சங்க தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது கைது செய்து சிறையில் அடைத்தது கடும் ஜனநாயக விரோத போக்கை மத்திய அரசு செய்துள்ளது.
மேலும் அமைதி வழியில் சாம்பு கநூரிபார்டரில் எல்லையில் காத்திருப்புப் போராட்டத்தில் மேற்கொண்டு இருக்கும் விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது விவசாயிகள் கூடாரங்களை கலைத்து விவசாயிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விவசாயிகளின் போராட்டத்தை மத்திய ராணுவமும் பஞ்சாப் காவல்துறையையும் விவசாயிகளின் போராட்டத்தை சீர்குலைத்து வருகிறது.
மத்திய அரசு ஜனநாயக விரோத போக்கோடு வன்முறையை கையாண்டு விவசாயிகளை விவசாய சங்க தலைவர்களை அடக்கி ஒடுக்குவதை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைப்பு குழு வன்மையாக கண்டிக்கிறது.
கைது செய்யப்பட்ட விவசாய சங்க தலைவர்களும் விவசாயிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், அல்லது விரைவில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமைகளுக்கான அமைதியாக போராடும் உரிமை உடனடியாக உறுதி செய்யப்பட்டு விவசாயிகளை அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு அமைதி வழியில் போராட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கின்றது.
இந்திய விவசாயிகளின் ஒற்றுமையை மத்திய அரசிற்கும் பஞ்சாப் அரசிற்கும் எடுத்துக்காட்டும் வகையில் அனைத்து விவசாய சங்கங்களும் தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்கு சார்பாக வலியுறுத்துகிறேன்.
மேற்கண்டவாறு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு பொதுச் செயலாளர் வி.கே.வி. துரைசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பஞ்சாபில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் கூடாரம் அதிரடியாக காலி செய்யப்பட்டதை கண்டித்தும், விவசாயிகள் சங்கத் தலைவர் பி ஆர் பாண்டியன் பஞ்சாபில் கைது செய்யப்பட்டிருப்பதை கண்டித்தும் இன்று காலை திருச்சி ரயில் நிலையத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான அய்யாகண்ணு தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.