முதல் முறையாக கெடுபிடிகள் இல்லை, பிரபாகரன் பிறந்தநாள் விழாவுக்கு!

பிரபாகரன் பிறந்தநாள் விழாவை இந்த முறை நெருக்கடிகள் இல்லாமல் தமிழக கட்சிகள் கொண்டாடுகின்றன. சமூக வலைதளங்கள் முழுக்க பிரபாகரனுக்கு வாழ்த்து மழை!

பிரபாகரன் பிறந்தநாள் விழாவை இந்த முறை நெருக்கடிகள் இல்லாமல் தமிழக கட்சிகள் கொண்டாடுகின்றன. சமூக வலைதளங்கள் முழுக்க பிரபாகரனுக்கு வாழ்த்து மழை!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
prabakaran, LTTE, tamil eelam, prabakaran 63rd birth day, tamilnadu, naam tamizhar, mdmk, seeman, vaiko

பிரபாகரன் பிறந்தநாள் விழாவை இந்த முறை நெருக்கடிகள் இல்லாமல் தமிழக கட்சிகள் கொண்டாடுகின்றன. சமூக வலைதளங்கள் முழுக்க பிரபாகரனுக்கு வாழ்த்து மழை!

Advertisment

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 63-வது பிறந்த தினம் இன்று (நவம்பர் 26) உலகம் முழுவதும் பல்வேறு தமிழ் அமைப்புகளால் கொண்டாடப்படுகிறது. முந்தைய ஆண்டுகளைப் போல பிரபாகரன் படத்தை போட்டு துண்டு பிரசுரங்கள் வெளியிடவோ, படம் பொறித்த பேனர்களை வைத்து பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடத்தவோ இந்த ஆண்டு அதிக நெருக்கடி இல்லை.

நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த சில தினங்களாக குருதிக் கொடை முகாம்களை நடத்தினர். சென்னை ஆலம்பாக்கத்தில் உள்ள சீமான் இல்லத்திலும் இன்று காலை பிரபாகரன் பிறந்த தின நிகழ்ச்சி நடந்தது. இன்று (26-ம் தேதி) மாலை 4 மணிக்கு சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையம் அருகே சென்னை - திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள T.K.A திருமண மாளிகையில் நடைபெறும் விழாவில் சீமான் பேசுகிறார்.

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் நாளை (27- தேதி) வைகோ தலைமையில் நிகழ்ச்சி இருக்கிறது. இதில் உணர்ச்சிக் கவிஞர் காசி.ஆனந்தன், மல்லை சத்யா, இயக்குநர் புகழேந்தி தங்கராசு, டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், ஜி. தேவதாஸ் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.

Advertisment
Advertisements

பிரபாகரனின் 63-வது பிறந்த நாளையொட்டி டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பிரபாகரனின் பழைய வீடியோ பதிவுகளாலும், புகைப்படங்களாலும் நிறைந்து கிடக்கின்றன. திமுக சார்பில் அதிகாரபூர்வமாக எந்த நிகழ்ச்சியும் இல்லை என்றாலும், சமூக வலைதளங்களில் பிரபாகரனைக் கொண்டாடுவதில் முன்னணியில் இருப்பவர்கள் திமுக.வினரே!

 

Tamil Eelam Seeman Ltte Mdmk Vaiko

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: