வீடியோ: ”புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்” முழக்கம் உருவானது எப்படி? தலைவர் பிரபாகரனே சொல்கிறார்

இலங்கை தமிழர்களின் மனதிலும், தமிழீழம் என்றேனும் மலரும் என நம்பிக்கை கொண்டிருக்கும் அனைவருக்கும் உந்து சக்தியாக திகழ்பவர் பிரபாகரன்.

By: Updated: November 26, 2017, 01:39:25 PM

இலங்கை தமிழர்களின் மனதிலும், தமிழீழம் என்றேனும் மலரும் என நம்பிக்கை கொண்டிருக்கும் அனைவருக்கும் உந்து சக்தியாக திகழ்பவர் பிரபாகரன். இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரபாகரனின் 63-வது பிறந்தநாள்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதைத்தாண்டி, அவர் கடைபிடித்த கொள்கைகளும், கற்றுத்தந்த போர்க்குணமும் என்றும் அழியாது. அவர் மீது ஆயிரம் விமர்சங்கள் இருந்தாலும், ஒரு இனத்தின் விடுதலைக்காக, மீட்சிக்காக தன் சுயநலம், குடும்பம் என எதனையும் பாராமல் போரிட்ட பிரபாகரன் பிறந்தநாளை உலக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் மனதில் பிரபாகரன் என்றும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்.

தமிழீழத்துக்காக போராடும் அனைவரையும் உற்சாகம்கொள்ளும் ஒரு முழக்கம் “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”. அந்த முழக்கத்தை ஏன் உருவாக்கினோம் என பிரபாகரனே கூறும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், “விடுதலை புலிகளுக்கு பயிற்சி அளிக்கும்போது அவர்கள் அயர்ச்சியடையாமல் இருக்க ஒரு முழக்கம் தேவைப்பட்டது. அப்போது என் மனதுக்குள் எழுந்த முழக்கம்தான் ‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்’ என்பது”, என பிரபாகரன் கூறுகிறார்.

உந்துசக்தியாக விளங்கும் பிரபாகரனுக்கே உந்து சக்திதான் ‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்’ எனும் முழக்கம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Prabhakaran speakes about pulikalin thaagam tamil eela thayagam

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X