cauvery issue: தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை கொடுக்க காங்கிரஸ் தலைமையிலான சித்த ராமையா அரசு மறுத்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ளிட்ட இடங்களில் பந்த் நடந்தது.
இதற்கிடையில், தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தேவை இல்லை; அங்கு பெய்துவரும் மழையை காரணம் என கன்னடர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பேசியும், தவறான தகவல்களை பரப்பியும் வருகின்றனர்.
இதற்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிலளித்துள்ளார். அதில், “அக்டோபரில் நல்ல மழை பெய்தாலும் காவிரி நீர்ப்பிடிப்பு பெரும் பற்றாக்குறையில் முடிவடையும்.
குமரி, நெல்லை மற்றும் பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள அணைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட சில மாவட்டங்களில் அக்டோபர் மாதத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் பிற வட தமிழக மாவட்டங்களில் அக்டோபரில் குறைவான மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “கர்நாடகா மக்களில் சிலர் சென்னை மழையை ட்வீட் செய்து, தமிழகத்தில் அதிக மழை பெய்து வருவதாகக் காட்டுகின்றனர்.
சென்னை மற்றும் வடமாநிலங்களில் அதிக மழை பெய்துள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
காவிரியில் குறைவான மழை பெய்துள்ளது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10 டிஎம்சி, இதில் 5 டிஎம்சி டெட் ஸ்டோரேஜ் ஆகும். அதாவது பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“