வங்கக்கடலில் நேற்று உருவான ஃபீஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (சனிக்கிழமை) மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஃபீஞ்சல் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அது நகரும் வேகம் குறைந்துள்ளதால் நாளை ஞாயிற்றுக்கிழமை தான் கரையை கடக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில், " ஃபீஞ்சல் புயல் உருவானதிலிருந்து அது நகரும் வேகத்தில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் மிகவும் மெதுவாகவும், சில சமயங்களில் ஓரளவு வேகத்துடன் நகர்ந்து வந்தது. குறிப்பாக புயலுக்கு முந்தைய நிலயான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலையில், வங்கக்கடலில் நங்கூரம் இட்டதை போல நின்று கொண்டிருந்தது.
இதனால் இது புயலாக மாற வாய்ப்பே இல்லை என்று கூட சொல்லப்பட்டது. ஆனால் பின்னர்தான் புயலாக மாறியது. இப்படி இஷ்டத்திற்கு மாறி வந்த ஃபெஞ்சல் புயலின் நிலையை கணிப்பதில் தொடர்ந்து துல்லியத்தன்மை குறைந்து வருகிறது. இப்படி இருக்கையில் வெதர்மேன் புயல் நாளை கரையை கடக்கும்." என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“