சட்டப் பேரவையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்ட போது, பிரபல நகைச்சுவை காட்சியுடன் அந்தத் திட்டத்தை ஒப்பிட்டு பகிர்ந்து வீடியோ மீம்ஸ் ஆக வெளியிட்டவர் வாய்ஸ் ஆஃப் சவுக்கு அட்மின் பிரதீப்.
இவரின் மீம்ஸ் பெண்களை இழிவுப்படுத்துவது போல் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து பிரதீப் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது பிணையில் வெளியில் வந்துள்ள அவர், தனக்கு புழல் சிறையில் நிகழ்ந்த அனுபவங்கள் தொடர்பாக சவுக்கு வலையொளியில் பகிர்ந்துக் கொண்டார்.
அப்போது புழல் சிறையில் விதவிதமான குற்றங்கள் நிகழ்கின்றன. முதல் நாள் சிறையை பார்க்கும்போது முகப்பே அச்சுறுத்தல் கொடுத்தது.
சுற்றி மதில் சுவர்தான் உங்கள் கண்ணுக்கு தெரியும் என்றார். தொடர்ந்து உறவினர்கள் அனுப்பும் பணங்கள் கூட சிறையில் இருக்கும் நபர்களுக்கு கிடைக்காது என்றார்.
மேலும் சிறைக்குள் கோடிக்கணக்கான முறைகேடுகள் நிகழ்கின்றன என்றார். தொடர்ந்து, சிறையில் புதிய படங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டேன்” எனவும் பதில் அளித்தார்.
மேலும் சிறைக்குள் ஒரு பிரியாணி ரூ.800 வரை விற்கப்படுகிறது எனவும் பிரதீப் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“