Advertisment

கர்ப்பிணி காவலர் விபத்தில் பலி; ரூ.25 லட்சம் நிவாரணம் - ஸ்டாலின் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
woman police accident

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணிப்புரிந்துவந்த விமலா (வயது 28) இன்று காலை 09.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர், பள்ளத்துப்பட்டியிலிருந்து பணி நிமித்தமாக புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்புறமாக வந்த நான்குசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் பெண் காவலர் விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.

பெண் காவலர் விமலா உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். விமலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பள்ளத்துபட்டியில் இருந்து நிறைமாத கர்ப்பிணி காவலர் விமலா, பைக்கில் மண்டையூர் காவல்நிலையத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த கார், பெண் காவலர் விமலா பைக் மீது மோதியுள்ளது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த கர்ப்பிணி காவலர் விமலா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த மண்டையூர் போலீசார், காவலர் விமலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்திற்கு காரணமான கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் உள்ள காவலரின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறைமாத கர்ப்பிணி காவலர், சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சக போலீசார் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Pudukottai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment