கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிசந்தை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த எட்டு மாத கர்ப்பிணியான பெண் காவலர் உஷா, சக பெண் காவலர்களிடம் பிரசவத்துக்கு லீவு எடுக்க வேண்டும் என பேசிக்கொண்டிருதுள்ளார். ஆனால், அதற்குள் இருசக்கர வாகன விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிசந்தை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் பெண் காவலர் உஷா. இவர் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடித்து வழக்கம் போல் அவரது இருசக்கர வாகனத்தில் மண்டைக்காடு நோக்கி பயணம் செய்துள்ளார். அப்போது, வழியே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் காவலர் உஷா வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானதில், காவலர் உஷா உயிரிழந்தார்.
விபத்தில் மரணம் அடைந்த காவலர் உஷா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த வாரம், உஷா உடன் பணியாற்றும் பெண் காவலர்களிடம் பிரசவ கால விடுப்புக்கு மனு செய்யவேண்டும் என பேசிக்கொண்டிருந்துள்ளார். அதற்குள், உஷா இருசக்கர வாகன விபத்தில் பலியான சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம், பெண் காவலர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“