திருச்சியில், வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர், இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு, திருச்சியில் கர்ப்பிணி பெண் உஷாவிற்கு நேர்ந்த கொடுமை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியுடன் தர்மராஜ் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் காமராஜ் அவர்களின் வண்டியை தடுத்து நிறுத்தியுள்ளார். ஆனால் அந்த தம்பதியினர் நிற்காமல் சென்றனர்.
இதனால், ஆத்திரமடைந்த காமராஜ், இருசக்கர வாகனத்தை இரு முறை எட்டி உதைத்துள்ளார். இதனால், மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாய்ந்தது. அதில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் உஷா சாலையில் விழுந்தார். அந்த நேரத்தில் பின்னால் வந்த வேன் உஷா மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது கணவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இந்த துயர சம்பவத்திற்குய் முழு காரணம் காமராஜ் தான் என்று, கூடியிருந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தை சமாளிக்க முடியாத காவல் ஆய்வாளர் காமராஜ் உடனே அங்கிருந்து நகர்ந்தார். விடிய விடிய நடைப்பெற்ற இந்த போராட்டத்தினால், திருச்சி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சமூகவலைத்தளங்களிலு, இந்நிகழ்வு தீயாக பரவியது. #RIPUsha TrichyProtest #PoliceKilledUsha போன்ற ஹாஸ்டேக்குகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கர்ப்பிணி பெண்ணிற்கு நடந்த துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருவெறும்பூரில் ஹெல்மெட் அணியாததால் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். மனிதநேயமற்ற இச்செயல் வேதனையளிப்பதோடு, இதனைக் கண்டித்து அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதும் தடியடி நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது.
— M.K.Stalin (@mkstalin) March 8, 2018
மன்னிக்க முடியாத அநீதி ஒரு தாயாய் உருவாகிக்கொண்டிருந்த பெண்ணிற்கு திருச்சிக்கு அருகே நடந்திருக்கிறது. வன்மையாக கண்டிக்கிறேன்.
— R Sarath Kumar (@realsarathkumar) March 8, 2018
தம்பதிகள் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களின் மீது கடுமையாக நடந்து கொண்டதன் விளைவாக அப்பாவி கர்ப்பிணி பெண் இறப்பு மிகுந்த மனவேதனையையும் ,அதிர்ச்சியையும் அளிக்கிறது. இந்த கொடும் செயலுக்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது தமிழக அரசு விசாரனை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) March 8, 2018
பாவம்யா இந்த மனுசன்..????????#RIPUsha #PoliceKilledUsha pic.twitter.com/YTioxo6E2a
— தனி ஒருவன் ™????️ (@anandh_twitz) March 7, 2018