மக்களவைத் தேர்தலின் போது கூட்டணி தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக கொடி நாளையொட்டு சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை நேற்று ஏற்றினார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா கூறியதாவது:
” ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை விஜயகாந்த் நடிகராக இருந்தபோதிலிருந்து செய்துவருகிறார். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் ஈரொடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிமுக-தான் அமோக வெற்றி பெறும்.
கலைஞர் கருணாநிதிக்கு விஜயகாந்த் மெரினாவில் கூட்டம் நடத்தி தங்கப் பேனாவை பரிசாகக் கொடுத்தார். கருணாநிதி மீது அவருக்கு அளவு கடந்த அன்பு உண்டு. ஆனால் சுற்றுச்சூழலை பாதிக்கும் அளவில் உள்ள பேனா நினைவுச் சின்னம் அமைப்பதில் உடன்பாடு இல்லை. மக்களைவை தேர்தலின்போது தேமுதிகவின் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும்” என்று அவர் கூறினார்.