/indian-express-tamil/media/media_files/uu4SuAuRpCDxR6VrQawj.jpg)
நடிகர் விஜயகாந்தின் படத்தை பிரேமலதா கைகளில் பச்சைக் குத்திக் கொண்டார்.
நடிகர் விஜயகாந்த் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மரணித்தார். அவரின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ளது.
அவரின் நினைவிடத்தில் தினந்தோறும் ரசிகர்கள், திரையுலகினர் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா செய்த காரியம் ஒன்று வைரலாகிவருகிறது.
விஜயகாந்தின் நினைவை மனதில் சுமப்பதுபோல், அவரின் புகைப்படத்தை கைகளில் சுமக்கும் வண்ணம் அவர் பச்சைக் குத்தியுள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகின்றன. மறைந்த நடிகர் விஜயகாந்தின் வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது.
இந்த வீட்டில் நடிகை ரம்பா இன்று விஜயகாந்தின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். நடிகர் விஜயகாந்த், நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது அச்சங்கத்தின் கடனை அடைத்தவர் என்ற பெருமைக்குரியவர்.
இது தவிர இவரது அரசியல் இயக்கமும் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.