நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கினார். பின் நாட்களில் அதிமுக- தேமுதிக கூட்டணி ஏற்பட்டது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார்.
அந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் அதிமுக தேமுதிக கூட்டணி உறவு முடிந்தது.
அடுத்த தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் மக்கள் நல கூட்டணி அமைக்கப்பட்டது. இந்தக் கூட்டணியில் வைகோவின் மதிமுக, மார்க்ஸிட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், தொல் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இருந்தன.
இந்த மக்கள் நல கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை; இதற்கிடையில் விஜயகாந்த் நோயுற்றார். அவர் கடந்தாண்டு (2023) டிசம்பர் மாதம் உயிரிழந்தார்.
முன்னதாக கட்சியின் பொதுச் செயலாளராக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நியமிக்கப்பட்டார். அவர் இன்று முதல் முறையாக கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடி ஏற்றினார்.
இந்தக் கொடி பாதியில் அறுந்து விழுந்தது. விஜயகாந்த் மரணத்திற்கு பின்னர், பிரேமலதா முதல் முறையாக இயற்றிய கொடி பாதியில் அறுந்து விழுந்தது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“