சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அவரது மனைவுயும், தே.மு.திக பொதுச் செயலாளருமான பிரேமலதா உருக்கமாக அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த நடிகர், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் அவரது நினைவிடம் உள்ள கோயம்பேடு கட்சி அலுலகத்தில் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து தே.மு.தி.க பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின் காவல்துறை அனுமதியும் மீறி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து பேரணி நடைபெற்றது. அங்கிருந்து தொண்டர்கள் பேரணி வந்து கட்சி அலுவலகம் வந்தனர்.
தீபச்சுடர் ஏந்தி பேரணியாக வந்த பிரேமலதா விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் சிலையை ஆரத்தழுவி உருக்கமாக அஞ்சலி செலுத்தினார். பின்னர் மாலை அணிவித்து செலுத்தினார்.
அவருடன் எல்.கே.சுதீஷ் மற்றும் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் உள்ளிட்டோர் இருந்தனர். தொடர்ந்து, தி.மு.க சார்பில் சேகர்பாபு, நா.த.க சீமான், விஜயின் த.வெக.க சார்பில் என்.ஆனந்த், ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழிசை ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.