‘எதார்த்தமாக நடந்த விஷயம்… விதி..!’ சுபஸ்ரீ மரணம் பற்றி பிரேமலதா சர்ச்சை கருத்து

அப்படி இருக்கும்போது, அந்த நேரத்தில், அந்தப் பெண் செல்ல, காற்றில் பேனர் அந்தப் பெண் மீது விழ வேண்டும். பின் பக்கம் வந்து கொண்டிருந்த லாரி அவர் மீது ஏற வேண்டும். அவர் இறக்க வேண்டும் என்ற விதி இருந்துள்ளது

By: Updated: September 24, 2019, 07:41:34 AM

துரைப்பாக்கம் – பல்லாவரம் சாலையில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளருமான சி.ஜெயகோபால் தன் மகன் திருமணத்திற்கு வருகை தர இருக்கும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை வரவேற்று பேனர்களை வைத்திருந்தார்.

பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்த 23 வயது சுபஸ்ரீ மீது, ஒழுங்காக கட்டப்படாத பேனர் விழுந்தது. அந்த திடீர் சம்பவத்தால் நிலைத் தடுமாறி சாலையில் கீழே விழுந்தார். சுபஸ்ரீயைத் தொடர்ந்து பின்னால் வந்த லாரி, நொடிப்பொழுதில் சுபஸ்ரீ மீது ஏறியது. இதில் அந்த பெண், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியிருந்தது.


லாரி ஓட்டுநர் மற்றும் கவுன்சிலர் மீது ஐ.பி.சி. 308ன் கீழ் (ஐபிசி பிரிவு 308 – கொலையாகாத மரணம் விளைவிக்கும் குற்றத்தைச்செய்ய முயற்சித்தல்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையை அடுத்த ஆவடியில் தேமுதிக பொதுக்கூட்டத்தில் அந்தக் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “எதார்த்தமாக நடந்த விஷயம்தான். பேனர் வைக்காதவர்கள் யாரும் இல்லை. அனைவரும் வைக்கின்றனர். அப்படி இருக்கும்போது, அந்த நேரத்தில், அந்தப் பெண் செல்ல, காற்றில் பேனர் அந்தப் பெண் மீது விழ வேண்டும். பின் பக்கம் வந்து கொண்டிருந்த லாரி அவர் மீது ஏற வேண்டும். அவர் இறக்க வேண்டும் என்ற விதி இருந்துள்ளது. இதை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தி வருகின்றனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Premalatha vijayakanth about subashri death banner accident

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X