விஜயகாந்த் பென்சன் ரூ.15,000: இட்டுக்கட்டிப் பேசுவோருக்கு பிரேமலதா பதில்!

மறைந்த தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்தின் எம்.எல்.ஏ. பென்சன் தொகையான ரூ. 15,000 குறித்து சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

மறைந்த தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்தின் எம்.எல்.ஏ. பென்சன் தொகையான ரூ. 15,000 குறித்து சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Premalatha Vijayakanth 2

இது விஜயகாந்திற்கு மக்கள் கொடுத்த ஊதியம் என்றும், அந்தப் பணம் ‘வள்ளல் விஜயகாந்த் டிரஸ்ட்’-க்குச் சென்று ஏழை மக்களுக்கு உதவப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மறைந்த தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் 2006 முதல் 2016 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தமிழக அரசின் விதிகளின்படி, 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்களின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்படும். விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் இந்த ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தார். இந்தச் செய்தி வெளியானதையடுத்து, சிலர் பிரேமலதா மீது சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

Advertisment

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், "விஜயகாந்தின் ஓய்வூதியத் தொகையான ரூ. 15,000 குறித்து சிலர் இட்டுக்கட்டிப் பேசுகிறார்கள். அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது அரசு அவருக்கு ஊதியம் அளித்தது. அவர் மறைந்த பிறகு அந்தப் பென்சன் வருகிறது. விஜயகாந்தின் எம்.எல்.ஏ. வெற்றிக்கு மக்கள் தான் காரணம். எனவே, இந்தத் தொகை மக்கள் அவருக்குக் கொடுத்த சம்பளமாகவே நான் பார்க்கிறேன்.

இந்தப் பணம் 'வள்ளல் விஜயகாந்த் டிரஸ்ட்' கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு, அதன் மூலம் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்யப்படுகின்றன. விஜயகாந்த் இறந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விஷயத்தை ஏன் இவ்வளவு பெரிய பிரச்சனையாக்குகிறார்கள் எனத் தெரியவில்லை. நலத்திட்ட உதவிகளைச் செய்வதில் அவருக்கு ஈடுபாடு அதிகம். இன்றும் எங்கள் தலைமை அலுவலகத்தில் தினமும் 3,000 முதல் 4,000 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

மேலும், "புரியாமல், தெரியாமல் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்" என்றும் பிரேமலதா கேட்டுக்கொண்டார்.

Premalatha Vijayakanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: