பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேமுதிகவில் பிரேமலாத இதுவரை எந்த பொறுப்பும் வகிக்காத நிலையில் முதன்முறையாக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக பொருளாளர் :
சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள, தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று (19.9.18) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், தேமுதிக அவைத் தலைவராக வி.இளங்கோவனும், தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த்தும், தேமுதிக கொள்கை பரப்பு செயலாளராக அழகாபுரம் மோகன் ராஜூம் ஒரு மனதாக அறிவிக்கப்பட்டனர். தேமுதிக-வில் இதுவரை கட்சி பதவி எதையும் வகிக்காத பிரேமலதா விஜயகாந்துக்கு முதன் முறையாக பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேமுதிகவை பொருத்தவரையில் பிரேமதலாத விஜய்காந்த் கட்சி பணி, போராட்டங்கள், அரசியல் கூட்டங்கள் என பலவற்றிலும் கலந்துக் கொண்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை தேமுதிக முதன்முறையாக சந்தித்த போது பிரேமலாதாவின் அரசியல் பிரச்சாரம் பலராலும் பாராட்டப்பட்டது. அதே சமயம் கட்சியில் சில குழப்பங்களும் நீட்டித்த சமயங்களில் அதற்கு காரணமாக பிரேமலதாவின் பெயர் அடிப்பட்ட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக பொருளாராக பிரேமலதா விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.