சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு: பிரேமலதா விஜயகாந்த்
சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ஜனவரியில் முடிவெடுக்கப்படும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ஜனவரியில் முடிவெடுக்கப்படும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
Advertisment
சென்னை கோயம்பேடுவில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (டிசம்பர் 13) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் சுதீஷ் மற்றும் அக்கட்சியின் 67 மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பிரேமலதா முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 2021 தமிழ சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடுவாரா மாட்டாரா என்பது குறித்து கருத்துகள் பரவி வருகிறது. நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். தேர்தலில் விஜயகாந்த்தின் பிரசாரம் இருக்கும். கடைசி நேர பிரசாரத்தில் விஜயகாந்த் நிச்சயமாக பங்கேற்பார் என்று பிரேமலதா தெரிவித்தார்.
2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்த நிலையில், 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணியைத் தொடருமா? அல்லது தேமுதிக புதிய கூட்டணியை உருவாக்க முயற்சிக்குமா என்பது போன்ற விவாதங்கள் நடைபெற்றது.
இது குறித்து தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, “தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் ஜனவரியில் நடைபெறுகிறது. அதில் கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு 2021 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில், இந்த கூட்டத்தில், தேமுதிக வலிமையாக இருக்கும் தொகுதிகளின் பட்டியலை தயாரிக்க வேண்டும் என தேமுதிக மாவட்ட செயலாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுள்ளார்.
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 9 தீரமாணங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடவேண்டும்.
புயலாள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று டெல்லி போராட்டத்திற்கு குழு அமைத்து மத்திய அரசு தீர்வு காண வேண்டும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்துவீசிய நடராஜனை பாராட்டுதல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil