/indian-express-tamil/media/media_files/2025/08/14/premalatha-vijayakanth-2025-08-14-10-22-41.jpg)
மேம்பாலத்தை பார்த்து கண் கலங்கி விழுந்து வணங்கிய பிரேமலதா விஜயகாந்த்... ரிஷிவந்தியத்தில் உருக்கமான தருணம்
மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, ரிஷிவந்தியம் தொகுதியில் கட்டிய மேம்பாலத்தின் முன்பு, தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விழுந்து வணங்கிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தே.மு.தி.கவின் தேர்தல் பணிகள்: 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் 7 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "உள்ளம் தேடி இல்லம் நாடி" மற்றும் "கேப்டனின் ரத யாத்திரை" என்ற பெயர்களில் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
ஆக.3 அன்று தொடங்கிய இந்தச் சுற்றுப்பயணத்தில், மாவட்டங்கள்தோறும் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டங்களும், மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மறைந்த தலைவர் விஜயகாந்த் இல்லாமல், தே.மு.தி.க சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பதால், கட்சியின் பலத்தைக் காட்டும் நோக்கில் இந்த சுற்றுப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
ரிஷிவந்தியம் சுற்றுப்பயணம்: இந்தச் சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக, ஆக.13 அன்று பிரேமலதா விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதிக்குச் சென்றிருந்தார். அங்கே, விஜயகாந்த் எம்.எல்.ஏவாக இருந்தபோது கட்டப்பட்ட மேம்பாலத்தின் முன்பு, விஜயகாந்தின் புகைப்படத்தை அருகில் வைத்து விழுந்து வணங்கி மரியாதை செய்தார். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
விருத்தாசலத்தில் போட்டி? 2026 சட்டமன்றத் தேர்தலில், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். ஆனால், கூட்டணி குறித்த இறுதி முடிவு, 2026 ஜனவரியில் நடைபெற உள்ள கட்சியின் மாநில மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.