நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி. சாலையில் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழக அரசியல் களத்தில் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது என வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
குறிப்பாக, விஜய் ரசிகர்களைக் கடந்த ஏராளமான பொதுமக்களும் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிகிறது.
இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கை, முன்னெடுக்கப்போகும் அரசியல் நகர்வுகள், திட்டங்கள் உள்ளிட்டவற்றை அறிய அக்கட்சி தொண்டர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இந்திய அரசியல் வரலாற்றில் தேமுதிக சார்பாக மதுரையில் நடத்தப்பட்ட மாநாட்டில் 25 லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டதாக அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு!
மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5லட்சர் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது!
உட்கார இடம் இல்லாமல் மாநாட்டு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர்!
மொத்தம் 25லட்சம் பேர் கலந்து கொண்டனர்!
உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது!" எனப் பதிவிட்டுள்ளார்.
விஜய்யின் மாநாடு நடைபெறும் இன்றைய தினத்தில், பிரேமலாதா விஜயகாந்த் இவ்வாறு பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“