ஜனாதிபதி விருதுகள் அறிவிப்பு: தமிழக காவல்துறையை சேர்ந்த 21 பேருக்கு விருது

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26, குடியரசு தினத்தன்று காவல்துறையில் திறம்பட பணிபுரிந்த அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கப்படும்.

2018-ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26, குடியரசு தினத்தன்று காவல்துறையில் திறம்பட பணிபுரிந்த அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கப்படும்.

அந்த வகையில் இந்தாண்டுக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை நாளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார்.

இந்தாண்டு தமிழக காவல் துறையிலிருந்து ஜனாதிபதி விருதை பெறப்போகும் அதிகாரிகளின் பட்டியல்:

1. ராதிகா, எஸ்.பி., லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு, சென்னை

2. லலிதா லஷ்மி, எஸ்.பி., பொருளாதார குற்றப்பிரிவு, சென்னை

3. மல்லிகா, துணை ஆணையர், மத்திய குற்றப்பிரிவு, சென்னை

4. சாமுண்டீஸ்வரி, எஸ்.பி., தமிழ்நாடு போலீஸ் அகாடமி, சென்னை

5. லஷ்மி, துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு, கோயம்புத்தூர்

6. இளங்கோ, கூடுதல் கண்காணிப்பாளர், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு, சென்னை

7. மோகன்ராஜ், கூடுதல் கண்காணிப்பாளர், காவலர் பயிற்சி பள்ளி, ஆவடி, சென்னை

8. ராஜேந்திரன், கூடுதல் கண்காணிப்பாளர், சிஐடி சிறப்பு பிரிவு, தலைமையகம், சென்னை

9. செல்வன், துணை ஆணையர், தி.நகர், சென்னை

10. சுப்புராயன், துணை ஆணையர், தரமணி, சென்னை

11. ஹெக்டர் தர்மராஜ், துணை கண்காணிப்பாளர், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு, நாகர்கோவில்

12. ராமச்சந்திர மூர்த்தி, இன்ஸ்பெக்டர், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு, சென்னை

13. அருள்ராசு ஜஸ்டின், இன்ஸ்பெக்டர், சிஐடி சிறப்பு பிரிவு, சென்னை

14. குமாரவேலு, இன்ஸ்பெக்டர், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு, சென்னை

15. பாஸ்கரன், இன்ஸ்பெக்டர், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு, சென்னை

16. மோகன் குமார், எஸ்.ஐ., சென்னை

17. வேணுகுமாரன், சிறப்பு எஸ்.ஐ., கணினிவழி குற்றப்பிரிவு, சென்னை

18. செல்வராஜூ, சிறப்பு எஸ்.ஐ., லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு, கோயம்புத்தூர்

19. ரவி, சிறப்பு எஸ்.ஐ., நீலகிரி மாவட்டம்

20. மதிவேந்தன், சிறப்பு எஸ்.ஐ., லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு, சென்னை

21. வேங்கட சரவணன், தலைமை காவலர், ஜே8 நீலாங்கரை, சென்னை

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close