வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையின் நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்கிறார். பின்னர் மருத்துவமனையின் நூற்றாண்டு தொடக்க விழாவிற்குப் பின்னர் நாராயணி மருத்துவமனையில் 10 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவையும் தொடக்கி வைக்கிறார். இரண்டு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு ஹெலிகாப்டர் மூலம் வேலூரில் உள்ள ஸ்ரீபுரம் தங்கக் கோவிலுக்கும் செல்ல உள்ளார்.
இதற்காகச் சென்னை வந்தடைந்தவரைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் தகுந்த மரியாதையுடன் வரவேற்றார்.
,
அவரை தொடர்ந்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சால்வை போர்த்தி, பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
,
இவர்களுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் உடன் இருந்து வரவேற்றார்.
சென்னை விமான நிலையம் வந்தடைந்த பின்னர் தனி ஹெலிகாப்டர் மூலம் வேலூர் புறப்பட்டு சென்றார். இந்த இரண்டு நாள் பயணத்திலும், குடியரசு தலைவர் கோவிந்த் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கியிருப்பார்.