இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு திருச்சி வருகையை முன்னிட்டு இன்றும், நாளையும் பாதுகாப்பு காரணம் கருதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க திருச்சி விமான நிலையத்திற்கு நாளை நவ. 30 ஆம் தேதி வருகை தருகிறார்.
அதனால் அரசு பாதுகாப்பு காரணம் கருதி இன்றும் நவ.29 ஆம் தேதி, ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் செய்யும் திருச்சி- தஞ்சை-திருவாரூர் சாலைகளிலும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
எனவே, இன்றும், நாளையும் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“