குடியரசுத் தலைவர் திருச்சி வருகை; ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு

திருவாரூரில் இருந்து ஹெலிகாப்டரில் கிளம்பி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடக்கரை பஞ்சக்கரையில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்துக்கு மாலை 5.30 மணிக்கு வருகிறார்.

திருவாரூரில் இருந்து ஹெலிகாப்டரில் கிளம்பி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடக்கரை பஞ்சக்கரையில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்துக்கு மாலை 5.30 மணிக்கு வருகிறார்.

author-image
WebDesk
New Update
WhatsApp Image 2025-09-03 at 15.58.07_3f5538fa (1)

2 நாள் பயணமாக நேற்று சென்னை வருகை தந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று நண்பகல் திருச்சி வந்தடைந்தார்.
திருச்சி விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யா மொழி, கீதா ஜீவன் ஆகியோர் பொன்னாடைகள், பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றனர்.

Advertisment

WhatsApp Image 2025-09-03 at 15.58.08_c5d3f472

இதனைத்தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் தலைவர் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு புறப்பட்டுச் சென்றார். மதியம் 2.30 மணியளவில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
பின்னர் திருவாரூரில் இருந்து ஹெலிகாப்டரில் கிளம்பி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடக்கரை பஞ்சக்கரையில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்துக்கு மாலை 5.30 மணிக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சென்று ஸ்வாமி தரிசனம் செய்த பிறகு கார் மூலம் திருச்சி விமான நிலையம் செல்கிறார். இரவு 7 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து தனிவிமானம் மூலம் டெல்லி கிளம்பிச் செல்கிறார்.

க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: