Advertisment

“ஆசீர்வதிக்கப்பட்டது போல் உணர்கிறேன்”.. கன்னியாகுமரியில் திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கன்னியாகுமரி வந்தார். “தாம் ஆசீர்வதிக்கப்பட்டதுபோல் உணர்வதாக தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Draupadi Murmu meditation at Kanyakumari Vivekananda Mandapam

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, திருவனந்தபுரத்தில் இருந்து விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வந்தார்.

அவருக்கு தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என். ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ், மக்களவை எம்.பி., விஜய் வசந்த் ஆகியோர் திரௌபதி முர்முவை வரவேற்றனர்.

Advertisment

தொடர்ந்து, அங்கிருந்து கார் மூலம் அருகிலுள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகு தளத்துக்கு சென்ற குடியரசுத் தலைவர் அங்கிருந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தைப் பார்வையிட்டார்.

இது தொடர்பான படங்களை பகிர்ந்துள்ள குடியரசுத் தலைவர், “தாம் ஆசீர்வதிக்கப்பட்டதுபோல் உணர்ந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவேகானந்தர் பாறையில் திரௌபதி முர்மு சில நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டார். அங்குள்ள வருகை பதிவேட்டிலும் தனது கையெழுத்தை பதிவிட்டார்.

அதன் பின்னர் படகில் இருந்து கரை திரும்பியதும், காரில் விவேகானந்த கேந்திரா சென்று பாரத மாதா கோயிலை பார்வையிட்டார்.

அதன் பின்னர் அவர் கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் திரும்பினார்.

செய்தியாளர் த.இ. தாகூர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

President Of India Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment