குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (அக்.26) சென்னை வருகிறார். அவர் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
இந்த நிலையில் இன்று கவர்னர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதையடுத்து கவர்னர் மாளிகைக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் குண்டுவீச்சு சம்பவத்தில் பாஜக அலுவலகம் மீது குண்டுவீசிய நபர், ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது ஏற்கனவே 9 வழக்குகள் உள்ளன. பாஜக தலைமை அலுவலகம் மீது கடந்த 2022-ம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத் கைதானார்.
இவர் கடந்த 3 நாள்களுக்கு முன்புதான் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் இந்தக் குண்டுவீச்சு சம்பத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை சென்னை வரவுள்ள நிலையில் இந்தக் குண்டுவீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“