scorecardresearch

ஈஷா சிவராத்திரி விழா; கோவை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர்

ஈஷா யோகாவில் சிவராத்திரி விழா; குடியரசு தலைவர் வருகையையொட்டி கோவையில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு; தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியும் வருகை

ஈஷா சிவராத்திரி விழா; கோவை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர்
கோவைக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வருகை

கோவை ஈஷாவில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கோவை வந்துள்ளார்.

தற்போது மதுரையில் இருந்து கோவை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவருக்கு கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. டி.ஜி.பி சைலேந்திரபாபு, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை மாநகர மேயர் கல்பனா ஆகியோர் வரவேற்றனர்.

கோவைக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வருகை

இதையும் படியுங்கள்: கருணாநிதிக்கு ஜெ-விடம் பிடித்தது இந்த செயல்தான்: ஈரோட்டில் ஆ. ராசா பேச்சு

தொடர்ந்து அவர் காவல்துறை பாதுகாப்புடன் விமான நிலையத்திலிருந்து விருந்தினர் மாளிகைக்கு சாலை மார்க்கமாக செல்கிறார். தொடர்ந்து விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு பின்னர் ஈஷா யோகா மையத்திற்கு செல்கிறார்.

கோவைக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வருகை

குடியரசு தலைவர் வந்துள்ளதையொட்டி கோவையில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் குடியரசுத் தலைவருடன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: President droupati murmu arrived kovai to attend isha sivarathri function