scorecardresearch

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

President Ramnath Kovind approved Chennai High Court CJ transfer Tamil News நீதிபதி பானர்ஜியை 75 நீதிபதிகள் கொண்ட பட்டய உயர் நீதிமன்றத்திலிருந்து இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர்.

President Ramnath Kovind approved Chennai High Court CJ transfer Tamil News
President Ramnath Kovind approved Chennai High Court CJ transfer Tamil News

President Ramnath Kovind approved Chennai High Court CJ transfer Tamil News : கொலீஜியம் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஏற்றுக்கொண்டார்.

இதுகுறித்து இந்திய அரசின் கூடுதல் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 222-வது பிரிவின் க்ளாஸ்(1)ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர், தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஸ்ரீ ஜஸ்டிஸ் சஞ்சிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தது.

PTI -ன் அறிக்கையின்படி, செப்டம்பர் 16 அன்று SC கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் இந்த இடமாற்றத்தை ஏற்றுக்கொண்டார். அங்கு நீதிபதி பானர்ஜியை 75 நீதிபதிகள் கொண்ட பட்டய உயர் நீதிமன்றத்திலிருந்து இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர்.

இருப்பினும், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் உட்படப் பல பிரிவுகள் கொலீஜியத்திற்கு எழுதி, நவம்பர் 9-ம் தேதி பரிந்துரையைப் பகிரங்கப்படுத்தியதும் அதை திரும்பப் பெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. சென்னையில் உள்ள முக்கிய வழக்கறிஞர்களின் அமைப்புகள், 20,000 உறுப்பினர்களைக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (MHAA), மெட்ராஸ் பார் அசோசியேஷன் மற்றும் உயர்தர வழக்கறிஞர்கள் குழு உள்ளிட்டோர் கொலீஜியத்தின் பரிந்துரைக்கு எதிராகத் தீர்மானத்தை முன்வைத்தனர்.

முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி, 2019-ம் ஆண்டு மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: President ramnath kovind approved chennai high court cj transfer tamil news