குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அங்கு ஸ்டாலின், கனிமொழியிடம் கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்.
குடியரசு தலைவர் சென்னை வருகை:
தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக, காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள, ஆந்திர முதல்வர்கள், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு வருகை தந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க சென்னை வருகை தந்தார். விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்கள் வரவேற்றனர்.
அங்கிருந்து, கார் மூலம் காவேரி மருத்துவமனைக்கு வந்தடைந்த குடியரசு தலைவரை ஸ்டாலின், கனிமொழி வரவேற்றனர். அங்கு, கருணாநிதியை சந்தித்த அவர், கருணாநிதிக்கு அளித்து வரும் சிகிச்சைகள் பற்றி ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார்.
பின்னர், மருத்துவமனையில் இருந்து கிளம்பி விமான நிலையம் வந்து, அங்கிருந்து கேரளாவுக்கு விமானம் மூலம் புறப்பட்டார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ள குடியரசு தலைவர் ராம்நாத்,
5, 2018
என்று பதிவிட்டுள்ளார்.