/tamil-ie/media/media_files/uploads/2023/05/New-Project117.jpg)
Noyyal river
கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியில் இருந்து பட்டண பகுதிக்கு செல்லும் வழியில் நொய்யல் ஆறு செல்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி கோவை. திருப்பூர், ஈரோடு வழியாக கரூர் மாவட்டம் காவிரியில் கலக்கும் 172 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ஆற்றில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனங்கள் உள்ளிட்டவைகள் கலக்கப்பட்டு நீர் மாசடைகிறது. இதை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கோவையில் தொழிற்சாலை பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாயம், ஆயில் உள்ளிட்ட ரசாயன கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலந்து மாசடைந்து ஆற்று நீர் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. #Coimbatore | @CbeCorp | @CollectorCbepic.twitter.com/QG2w4OL1jD
— Indian Express Tamil (@IeTamil) May 6, 2023
இந்நிலையில் தொழிற்சாலை பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாயம், ஆயில் உள்ளிட்ட ரசாயன கழிவுகளால் நொய்யல் ஆறு நுரை ததும்பி மிக மோசமான நிலையில் உள்ளது. ஒண்டிப்புத்தூர் நெசவாளர் காலனியில் இருந்து பட்டணம் பகுதி செல்லும் வழியில் உள்ள நொய்யல் ஆறு அணைக்கட்டில் சாக்கடை கழிவால் ஆற்று நீர் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. மேலும் ராசயனங்களால் நுரை ததும்பி செல்கிறது.
இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.