கொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி!

கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்கும் வகையில் பொதுமக்களுக்கு நீர்மோர் பந்தல், போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கண்ணாடிகளை விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.இன்று வழங்கினார்.

கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்கும் வகையில் பொதுமக்களுக்கு நீர்மோர் பந்தல், போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கண்ணாடிகளை விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.இன்று வழங்கினார்.

author-image
WebDesk
New Update
summer heat sun glass

கொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழுப்புரம் சிக்னலில் பொதுமக்கள் தாகம் தணித்திட நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மோர் பந்தலை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் திறந்து வைத்துதார்.  மேலும், அங்கிருந்த பொதுமக்களுக்கு நீர்மோர், வெள்ளரி, தர்பூசணி ஆகியவற்றையும் அவர் வழங்கினார்.

Advertisment

மேலும், விழுப்புரம் நகரப்பகுதியில் போக்குவரத்து சிக்னல்களில் வெயிலில் நின்று பணியாற்றும் 20 போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெயிலை சமாளித்திடும் வகையில் தொப்பியும், கருப்பு கண்ணாடியும் அவர் வழங்கினார். விழாவில் காவல்துறை கண்காணிப்பாளர் ரவீந்திர நாத் குப்தா, ஆயுதப்படை டிஎஸ்.பி. ஞானவேல், போக்குவரத்து காவல் ஆய்வாளர் வசந்த், உதவி ஆய்வாளர்கள் குமாரராஜா, விஜயரங்கன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

Villupuram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: