Advertisment

ஜீவஜோ‌தி கணவ‌ர் பிரின்ஸ் சா‌ந்தகுமா‌ர் கொலை வழக்கு - சரவண பவன் ஓட்டல் ராஜகோபால் தவிர்த்து 9 குற்றவாளிகள் சரண்டர்

சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால், ஜனார்த்தனன் ஆகியோர் சரணடைய கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் அவர்கள் சரணடையவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rajagopal saravana bhavan, rajagopal saravana bhavan hotel rajagopal annachi, hotel saravana bhavan, rajagopal saravana bhavan in jail. jeevajothi, prince santhakumar, chennai high court, sentence, சரவண பவன், சரவண பவன் ஹோட்டல், சரவண பவன் ராஜகோபால், ஜீவஜோதி, பிரின்ஸ் சாந்தகுமார், சென்னை உயர்நீதிமன்றம், தண்டனை

ஜீவஜோ‌தி கணவ‌ர் பிரின்ஸ் சா‌ந்தகுமா‌ர் கொலை வ‌ழ‌க்‌கி‌ல் தண்டனை 9 பேர் குற்றவாளிகள் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளனர்.

Advertisment

நாகை மா‌வ‌ட்ட‌ம் வேதார‌ண்ய‌த்தை சே‌ர்‌ந்‌தவ‌ர் ‌ஜீவஜோ‌தி. இவரது கணவ‌ர் பிரின்ஸ் சா‌ந்தகுமா‌ர். ஜீவஜோதியை மறுமணம் செய்யும் நோக்கத்தில் சா‌ந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் கொலை செ‌ய்ததாக குற்றம் சா‌ற்றப்பட்டது.

இ‌ந்த வழ‌க்‌கை விசாரித்த சென்னை பூந்தமல்லி நீதிமன்றம்,ராஜகோபாலுக்கு 10 ஆ‌ண்டு ‌கடுங்காவல் சிறை‌த் த‌ண்டனையு‌ம், 55 ல‌ட்ச‌ம் ரூபா‌ய் அபராதமு‌ம் ‌வி‌தி‌த்தது. கொலைக்கு உடந்தையாக இருந்த டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஜாகீர் உசேன், கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் உள்ளிட்ட 11 பேருக்கு 7 முத‌ல் 9 ஆ‌ண்டுக‌ள் வரை த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது. கட‌த்த‌ல் வழ‌க்‌கி‌ல் ராஜகோபாலு‌க்கு 3 ஆ‌ண்டு‌ம், ம‌ற்ற 8 பேரு‌க்கு இர‌ண்டு ஆ‌‌ண்டுக‌ளும் த‌‌ண்டனை ‌‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்த இர‌ண்டு வழ‌க்‌குக‌‌ளிலு‌ம் ‌வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்தில் ராஜகோபால் உள்ளிட்டோர் அப்பீல் செய்தனர். அதே சமயம் அரசு தர‌ப்‌பி‌‌ல், 10 ஆ‌ண்டுக‌ள் ‌சிறை‌த் த‌ண்டனையை ஆ‌யு‌ள் த‌ண்டனையாக அ‌திக‌ரி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌ப்‌‌பீ‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இந்த அப்பீல் மனுவை செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ ‌‌நீ‌திபதிகள் பி.கே. மிஸ்ரா, பானுமதி ஆகியோ‌ர் அடங்கிய அ‌ம‌ர்வு, ‌கீ‌ழ் ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌ளி‌த்த 10 ஆ‌ண்டு ‌சிறை த‌ண்டனையை ஆ‌யு‌ள் த‌ண்டனையாக அ‌திக‌ரிப்பதாக அறிவித்தது.

குற்றவாளிகளுக்கு இபிகோ 302 வது பிரிவின்படி( கொலை ) தண்டனை வழங்காமல், தண்டனை வழங்கியதில் கீழ் நீதிமன்றம் தவறிழைத்து விட்டதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ராஜகோபால் தெளிவான நோக்கத்துடன் பயங்கர குற்றத்தை இழைத்திருப்பதாகவும், இது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அனைவரின் மேல் முறையீட்டு மனுகளையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.

இந்நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய குற்றவாளிக்கு ஜூலை 7 ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.

இந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில் குற்றவாளிகள், டேனியல், தமிழ்செல்வன், சேது, காசி என்ற காசிவிஸ்வநாதன், கார்மேகம், ஜாகீர் உசேன், பாலு, பட்டு ராஜன், முருகானந்தம் ஆகியோர் சென்னை 4 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால், ஜனார்த்தனன் ஆகியோர் சரணடைய கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் அவர்கள் சரணடையவில்லை. சரணடைந்த 9 பேரையும் சிறையில் அடைக்க 4 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தானேந்திரன் உத்தரவிட்டார்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment