பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்டிரல் எம்.ஜி.ஆர். ரயில் நிலையத்தில் இருந்து சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலை தொடங்கிவைத்தார். இந்த ரயில் காலை கோயம்புத்தூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு 12 மணிக்கெல்லாம் சென்னை வந்துவிடும். தொடர்ந்து சென்னையில் இருந்து 2.20க்கு கோயம்புத்தூர் புறப்படும்.
Advertisment
இந்த ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைக்கும்போது முதல்வர் மு.க. ஸ்டாலினை அன்போடு அழைத்தார். அவரின் அழைப்பை ஏற்று முகமலர்ச்சியுடன் மு.க. ஸ்டாலின் அவரின் அருகில் சென்றார்.
முன்னதாக ரயிலில் உள்ள மாணவ- மாணவியரிடம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது அருகில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனிருந்தனர்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஆளுநர் பங்கேற்றனர். ரூ.1,260 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஒருங்கிணைந்த முணையம் 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“