பிரதமர் நரேந்திர மோடி, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள புதிய முனைமத்தை திறந்துவைத்தார். தொடர்ந்து சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கிவைத்தார்.
முன்னதாக பேசிய மோடி, தமிழர்களின் சித்திரை 1 புத்தாண்டு குறித்தும் பேசினார்.
அப்போது, “தமிழர்கள் இன்னும் சில நாள்களில் தமிழ் புத்தாண்டை கொண்டாடவுள்ளனர். இது புதிய நம்பிக்கை, புத்துணர்ச்சி, புதிய வளம் ஆகியவற்றை கொடுக்கும். தொடர்ந்து, “புதிய தொடக்கமாகவும் அமையும்” என்றார்.
அப்போது அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து பேசிய நரேந்திர மோடி, “புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன. புதிய திட்டங்களும் வரவுள்ளன.
சாலை போக்குவரத்து திட்டங்கள் வணிகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கிழக்கு சாலை திட்டமானது பாரத் மாலா திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இன்று சில திட்டங்கள் மேலும் தொடங்கப்பட்டுள்ளன. அடிக்கலும் நாட்டப்பட்டுள்ளன. இந்தப் புதிய சர்வதேச விமான முனைமம் உலகத்தை சென்னையுடன் இணைக்கிறது.
மேலும், இன்று தொடங்கப்பட்டிருக்கும் திட்டங்கள் மக்கள் விரும்பிய திட்டங்கள். இந்தத் திட்டங்கள் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
இதனால் தமிழ்நாடு வளர்கிறது. தமிழ்நாடு வளரும்போது இந்தியா வளர்கிறது” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி ரூ.5200 கோடி திட்டங்களை தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“