/indian-express-tamil/media/media_files/EcpSdav6595V2ClYhU5M.jpg)
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கின. பிரதமர் நரேந்திர மோடி தொடற்கிவைத்தார்.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி காமராஜர் சாலை, நேப்பியார் பாலம், சிவானந்தா சாலை, பல்லவன் சாலை, பூந்தமல்லி சாலை, ஈவேரா சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “திருவள்ளூவர், வேலு நாச்சியாரை முன்னுதாரணமாக காட்டிப் பேசினார். அப்போது, “தமிழ்நாடு சாம்பியன்களை உருவா்ககும் பூமியாக திகழ்கிறது. வீரமங்கை வேலு நாச்சியார் மகளிர் சக்தியின் அடையாளம்.
விளையாட்டைப் பொறுத்தமட்டில் தமிழ்நாட்டிற்கு என்று தன்னிகரில்லா இடம் ஒன்று உள்ளது. அதனால்தான் சொல்கிறேன், இது சாம்பியன்களை உருவாக்கும் பூமி.
விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவை தலை சிறந்த நாடாக்க விரும்புகிறோம்; புதியக் கல்விக் கொள்கையில் தமிழ் நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விளையாட்டுத் துறைக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. விளையாட்டு என்பது பெரிய பொருளாதாரம் ஆகும்.
இதனால் இளைஞர்கள் பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்” என்றார். முன்னதாக நரேந்திர மோடி திருவள்ளூவரையும் மேற்கோள் காட்டிப் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.