பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பங்கஜ்பாய் மோடி இன்று (நவ.2) மதியம் 12 மணியளவில் கன்னியாகுமரி பகவதி அம்மன் திருத்கோவிலில் தரிசனம் செய்தார்.
இதையடுத்து முக்கடலும் சங்கமிக்கும் இடத்துக்கு சென்றார். அங்கு முக்கடல் தீர்த்த பகுதியை பார்வையிட்டார். பின்னர் விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றுவிட்டு திருச்சி சென்றார்.
பங்கஜ்பாய் மோடி திருச்சி வழியாக ராமேஸ்வரம் சென்றுவிட்டு கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். அவருக்கு உள்ளூர் போலீசார் பாதுகாப்பு அளித்தனர். அவர் பத்திரிகையாளரிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர் பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசவில்லை.
உலக சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் கடந்த சில நாள்களாக கூட்டம் குறைந்து காணப்படுகிறது.
த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“