Narendra Modi | Salem District | Lok Sabha Election | வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக மக்களை கவரும் வகையில் இடைவிடாத முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்த நிலையில் ஒரே மாதத்தில் 3வது முறையாக அவர் தமிழ்நாடு வரவுள்ளார். தற்காலிக அட்டவணையின்படி, மார்ச் 15-ம் தேதி சேலத்திற்கும், மார்ச் 16-ம் தேதி கன்னியாகுமரிக்கும், மார்ச் 18-ம் தேதி கோவைக்கும் பிரதமர் வருகை தருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டை என்பதால், சேலத்தில் நடைபெறும் மாநாடு அரசியல் பார்வையாளர்களையும் நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளது.
முன்னதாக, பிப்ரவரி 27-ம் தேதி திருப்பூரில் (மீண்டும் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதி) இருந்த மோடி, மறுநாள் தூத்துக்குடியில் பல கோடி மதிப்பிலான திட்டங்களை அர்ப்பணித்தார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக சுற்றுப் பயணத்தில் திடீர் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 15ஆம் தேதி சேலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பயணம் மார்ச் 19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
எனினும் இதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும், இந்த மாநாட்டுக்கு முக்கியமாக சேலம், நாமக்கல் மற்றும் கரூரில் இருந்து ஒரு லட்சம் நிர்வாகிகளை அழைத்து வர கட்சியின் மாநில பிரிவு திட்டமிட்டுள்ளது.
கஜ்ஜல்நாயக்கன்பட்டியில் உள்ள மைதானத்தில் ஆயத்தப் பணிகளை திமுகவின் முன்னாள் ராஜ்யசபா எம்பி கே.பி.ராமலிங்கம் தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“