scorecardresearch

நரேந்திர மோடி சகோதரர் சென்னை மருத்துவமனையில் அனுமதி.. காரணம் இதுதான்

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Prahlad Modi admitted to a private hospital in Chennai
பிரதமர் நரேந்திர மோடி சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி சென்னை ஆயிரம் விளக்கத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி. இவர் இந்தியா முழுக்க ஆன்மிக சுற்றுப் பயணம் செய்துவருகிறார்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட கோவில்களும் குடும்பத்துடன் சென்றுவந்துள்ளார். தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஏறகனவே 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை மார்க்கமாக பிரகலாத் மோடி மைசூருவில் பயணித்த போது, விபத்தில் சிக்கினார். தொடர்ந்து அவருக்கு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Prime minister narendra modis younger brother admitted to a private hospital in chennai

Best of Express