/indian-express-tamil/media/media_files/Fk32rbXgLf8AW44TE5XY.jpg)
கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் 1970_ம் ஆண்டு அன்றைய இந்திய ஜனாதிபதி வி.வி.கிரி , அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் திறந்து வைத்தார்.
சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு அரசின் ஆட்சி பணியில் இருந்த ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள். பல்வேறு மாநில முதல்வர்கள்,அமைச்சர்கள், திரைப்பட நடிக, நடிகைகள், பிரபலமான பல்துறை மனிதர்கள் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டதுடன்,தியான மண்டபத்திலும் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தவர்கள் பட்டியலில். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்,இன்றைய ஜனாதிபதி முர்மு, முன்னாள் துணைபிரதமர் அத்வானி குடும்பத்துடன், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு என ஒரு நீண்ட பட்டியல் இருந்தாலும்.
திறந்த வெளி கடற்பாறையில் சுவாமி விவேகானந்தர் இரண்டு இரவு, மூன்று பகல் தவமிருந்து ஞானம் பெற்றார் என்பது வரலாறு.
பிரதமர் மோடியின் தியானம் விவேகானந்தர் பாறையில் நேற்று மாலை (மே_30) 6.45. மணிக்கு தொடங்கியது சனிக்கிழமை (ஜூன்_1ம்)தேதி மதியம் மொத்தம் 45_மணி நேரம் தொடருகிறது.
பிரதமர் மோடி இன்று காலை சூரிய உதயத்தை பார்த்தவர் சிறிது நேரம் கடற்பாறையில் முழுமையாக காவி உடையுடன் நடை பயிற்சி மேற் கொண்டார்.
சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமரின் தியானம் நிகழ்வில். பிரதமர் அலுவலகம்,சமையல் அறை, பிரதமரின் தியான அறை முழுவதும் குளிர்சாதன கருவி அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வெள்ளிக்கிழமை (மே 31) காலை 10_மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அறைக்கு வெளியே இரண்டு முறை வெளியே வந்து சிறிது நேரம் நடைபயணம் மேற்கொண்டார்.
பாறையில் உள்ள பாத மண்டபத்திற்கு ஒரு முறை சென்று மலர்களை தூவி வணங்கினார்.
சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குமரியில் உள்ள நிலையில். குமரிக்கு சுற்றுலா வரும் அனைவருமே கடலில் படகு பயணம் மேற்கொண்டு சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம்,கடற்பாறை திருவள்ளுவர் சிலை யை காண வேண்டும் என்பது அனைவரின் கனவு.
திருவள்ளுவர் சிலை பாறைக்கும்_ விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே உள்ள கடற்பரப்பில் பிளாஸ்டிக் இளை பாலம் பணிகள் நடப்பதால் கடந்த 6மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகளை திருவள்ளுவர் சிலை பாறைக்கு அனுமதிக்கவில்லை.
இன்றும் சுற்றுலா பயணிகள் கடுமையான சோதனைக்கு பின் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.