கோவை சிறையில் கைதி அடித்துக் கொலை: மற்றொரு கைதி வெறிச்செயல்

கோவை சிறையில் கைதி அடித்துக் கொலை

கோவை மத்திய சிறையில் இரு கைதிகளுக்கிடையே நடந்த தகராறில் அடிதடி வழக்கில் அடைக்கப்பட்டுள்ள ரமேஷ் என்ற கைதி அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று இருவருக்குள்ளும் திடீரென்று மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் பலமாக தாக்கிக் கொண்டனர். அப்போது ரமேஷை கல்லால் பயங்கரமாக விஜய் தாக்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக, அங்கிருந்த சிறைக் காவலர்கள் விஜய்யை அவரது கொண்டுச் சென்று அடைத்தனர்.

அதேசமயம், ரத்தவெள்ளத்தில் படுகாயமடைந்த கைதி ரமேஷ் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கைதிகள் எதற்காக மோதிக் கொண்டார்கள் என்பன குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கல்லாலேயே ஒருவரை அடித்து கொலை செய்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கைதி விஜய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் தரப்பில் இருந்து முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

More Details Awaited…

×Close
×Close