தமிழகத்தில் செயல்படும் தனியார் பால் நிறுவனத்தின் ஆரோக்யா பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் நவம்பர் 8-ம் தேதி முதல் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தமிழக அரசு நிறுவனமான ஆவின் நிறுவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திடம் இருந்து பால் வாங்கி, பதப்படுத்தி, பால் விநியோகம் செய்கிறது.
தமிழகத்தில் ஆவின் பால் மட்டுமல்லாமல்,
பல்வேறு தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகத்தில் பால் பாக்கெட் 10 ரூபாய் பாக்கெட் முதல் அரை லிட்டர், ஒரு லிட்டர் என பல்வேறு அளவுகளில் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆவின் நிறுவனத்தின் பால் பாக்கெட்களைப் போலவே, மக்கள் தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்களையும் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில், ஆரோக்யா, திருமலா, நந்தினி, அமுல் ஆகிய பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
தனியார் பால் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக ஆரோக்யா நிறுவனம் பால் விற்பனை செய்து வரும் நிலையில், நவம்பர் 8-ம் தேதி முதல் பால் விலையை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆரோக்யா பால் ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.65-ல் இருந்து 67-ஆக உயர உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி, ஆரோக்யா நிறுவனம் பால் விலையை உயர்த்துவதாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பால் விலையை உயர்த்தும் ஆரோக்யா நிறுவனத்தின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பொன்னுசாமி, “மூலப்பொருட்கள் விலை உயராத நிலையில், பால் விலை உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆரோக்யா பால் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியிலும் கவலைகளை எழுப்பியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“